ஆப்நகரம்

அனுஷ்காவுடன் திருமணம் செய்யும் எண்ணம் எதுவுமில்லை: பிரபாஸ் பேட்டி

நடிகை அனுஷ்காவை திருமணம் செய்யும் எண்ணம் எதுவுமில்லை என நடிகர் பிரபாஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

TNN 6 Aug 2017, 6:16 pm
நடிகை அனுஷ்காவை திருமணம் செய்யும் எண்ணம் எதுவுமில்லை என நடிகர் பிரபாஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil prabhas opens up on rumours of marriage link up with anushka shetty
அனுஷ்காவுடன் திருமணம் செய்யும் எண்ணம் எதுவுமில்லை: பிரபாஸ் பேட்டி


பாகுபலி திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து, அதில் நடித்த பிரபாஸ் மற்றும் அனுஷ்காவுக்கு மார்க்கெட் எகிறியது. இப்படத்தின் வெற்றிக்கொண்டாட்டம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம், அனுஷ்காவுக்கும், பிரபாஸுக்கும் காதல், அவர்கள் இருவரும் திருமணம் செய்யப்போகிறார்கள் என்ற தகவலும் பரவியது.

இதற்கு இருவரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், 38 வயதான பிரபாஸ் தற்போது வெளிப்படையாக இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், “சில நாட்களாக எனக்கும், ஒரு நடிகைக்கும் காதல், திருமணம் செய்யப்போகிறோம் என்ற செய்தி பரவிவந்தது. முதலில் இது எனக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அதை கேட்டு, கேட்டு பழகி போய்விட்டது. நான் திருமணம் குறித்து நினைத்துக் கூட பார்க்க வில்லை. தற்போது அந்த எண்ணம் எனக்கு இல்லை.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்