உலகப் புகழ் பெற்ற பாகுபலி பிரபாஸ் தற்போது நடித்து வரும் ஒரு படத்துக்காக 37 கார்களை அடித்து நொறுக்கியுள்ளார். இயக்குனர் ராஜமௌலியின் பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ். தற்போது இதே போன்று பிரமாண்ட படமாக சாஹோ உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்காக 37 கார்களையும் 5 டிரக்குகளையும் பிரபாஸ் அடித்து நொறுக்கும் பெரிய சண்டைக்காட்சி அபுதாபியில் படமாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 20 நாட்கள் எடுக்கப்பட்ட இந்த சண்டைக் காட்சிக்காக சண்டை பயிற்சியாளர் கென்னி பேட் 100 நாட்கள் தயாரிப்பு பணிக்காக எடுத்துக் கொண்டுள்ளார். வரும் பொங்கல் தினத்தன்று இப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.