ஆப்நகரம்

நடிகர் சூரஜ் பஞ்சோலியை வைத்து இயக்கும் பிரபுதேவா!

இயக்குனர் பிரபுதேவா ‘ஹீரோ’ படத்தின் நாயகனாக சூரஜ் பஞ்சோலியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

TNN 29 Apr 2017, 3:12 pm
இயக்குனர் பிரபுதேவா ‘ஹீரோ’ படத்தின் நாயகனாக சூரஜ் பஞ்சோலியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
Samayam Tamil prabhudeva direct a actor suraj pancholi
நடிகர் சூரஜ் பஞ்சோலியை வைத்து இயக்கும் பிரபுதேவா!


நடிகர் சூரஜ் பஞ்சோலி ‘ஹீரோ’ படம் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர். இந்தப் படத்தை சல்மான்கான் தயாரித்தார். படம் வெற்றி பெறவில்லை. இருந்தாலும், தற்போது பரூக் கபீரின் படம், ரெமோ டிசோஷாவின் படம் என பிஸியாக இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சூரஜ். இந்த படங்களை தொடர்ந்து அடுத்தப்படியாக பிரபுதேவா படத்தில் நடிக்க உள்ளார்.

பிரபுதேவா சொன்ன கதை, சூரஜ் பஞ்சோலிக்கு பிடித்து போக, அவர் படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். இப்படம் ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ளது. பரூக் கபீரின் படத்தை முடித்தவும் பிரபுதேவாவின் படத்தில் நடிக்க இருக்கிறார் சூரஜ் பஞ்சோலி. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஹீரோயின்கள் உள்ளிட்ட பிற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. அனைத்து முடிவானதும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்