ஆப்நகரம்

பிரபுதேவாவின் ‘மெர்குரி’ விரைவில் ரிலீஸ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவாகும் ‘மெர்குரி’ விரைவில் வெளியாகவுள்ளது.

TNN 3 Nov 2017, 3:48 pm
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவாகும் ‘மெர்குரி’ விரைவில் வெளியாகவுள்ளது.
Samayam Tamil prabhudevas mercury movie will release soon
பிரபுதேவாவின் ‘மெர்குரி’ விரைவில் ரிலீஸ்!


இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், ‘இறைவி’ படத்தை அடுத்து தற்போது ‘மெர்குரி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்துவருகிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தில் பிரபு தேவாவுடன், ரம்யா நம்பீசன், சனந்த், இந்துஜா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கமல் நடித்த ‘பேசும் படம்’ பாணியில் ‘மெர்குரி’ படமும் ஒரு மௌனப் படமாக எடுக்கப்பட்டுள்ளது. வசனமே இல்லாத இந்தப் படத்துக்கு பின்னணி இசை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறுகின்றன என்று பேட்டியளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து அடுத்தச் சில மாதங்களில் ‘மெர்குரி’ வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்