ஆப்நகரம்

சீனு ராமசாமிக்காக இணையும் பிரபுதேவா-தமன்னா ஜோடி?

வித்தியாசமான படைப்புகளின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்ற இடத்தைப் பிடித்துள்ள இயக்குனர் சீனு ராமசாமி தனது அடுத்தப் படத்துக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 30 Jan 2017, 5:37 pm
சென்னை: வித்தியாசமான படைப்புகளின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்ற இடத்தைப் பிடித்துள்ள இயக்குனர் சீனு ராமசாமி தனது அடுத்தப் படத்துக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil prabhudheva seenu ramasamy team up tamannaah in talks
சீனு ராமசாமிக்காக இணையும் பிரபுதேவா-தமன்னா ஜோடி?


சீனு ராமசாமி இயக்கத்தில் இறுதியாக வெளியான் 'தர்மதுரை' திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர் பிரபுதேவா வுடன் இணைந்து தனது அடுத்தப் படத்தை இயக்க ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.

பிரபுதேவாவும், சீனு ராமசாமியும் நீண்ட நாட்களாக பேசி வந்த கதை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும், இதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தில் நடிக்க தமன்னா சம்மதம் தெரிவித்துவிட்டால், 'தேவி' படத்துக்குப் பிறகு பிரபுதேவா-தமன்னா ஜோடி இரண்டாவது முறையாக திரையில் கலக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. எனினும், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Seenu Ramasamy has been discussing a script with Prabhudheva for quite some time, and now the project has been finalised. A source informs that talks are on with Tamannaah to play the female lead in this yet-to-be titled film.

அடுத்த செய்தி

டிரெண்டிங்