ஆப்நகரம்

IFFI 2019: ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு!

இந்திய திரைப்படத்துறைக்கு ரஜினி அளித்துள்ள பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்று செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Nov 2019, 12:38 pm
கோவாவில் வரும் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 8 நாட்கள் 50 ஆவது சர்வதேச திரைப்பட விழா நடக்க இருக்கிறது. இந்த விழாவின் போது ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Rajinikanth


Lockup: சினிமாவுக்கு என்ன ஆச்சு? ஜெயில், கைதி, லாக்கப் டைட்டில் ஏன்?

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக இந்திய திரைப்படதுறைக்கு ரஜினி அளித்துள்ள பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 50 பெண் இயக்குநர்களின் 50 படங்கள் திரையிடப்படுகிறது. 200 க்கும் அதிகமான வெளிநாட்டு படங்களில் 24 படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Bigil திருட்டு கதை விவகாரம்: அட்லீ மீது புகார் கொடுத்த தெலுங்கு இயக்குநர்!

இது குறித்து ரஜினிகாந்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு ஐகான் ஆப் தி கோல்டன் ஜூபிளி என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரெஞ்சு நடிகை இசபெல் ஹப்பர்ட்டிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவது குறித்து ரஜினிகாந்த் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழா பொன்விழாவையொட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டதற்காக மத்திய அரசுக்கு நன்றி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடிப்பு: சுந்தர் ஆறுமுகம்!

தற்போது ரஜினிகாந்த் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். போலீஸ் ஸ்டோரியை மையப்படுத்திய இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.


வரும் 2020 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சிவா இயக்கத்தில் தனது 168 ஆவது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு வியூகம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.



அடுத்த செய்தி

டிரெண்டிங்