ஆப்நகரம்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரசன்னா, அருள்நிதி நிதியுதவி அறிவிப்பு

வெளிமாநிலத்திற்கு சென்று நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ பலரும் முன்வந்துள்ள நிலையில், நடிகர்கள் பிரசன்னா மற்றும் அருள்நிதி ஆகியோரும் மாணவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Samayam Tamil 4 May 2018, 4:23 pm

நீட் மாணவர்களுக்கு ரூ.1000 உதவி: தமிழக அரசு அறிவிப்பு

undefined

undefined

undefined

வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் தமிழ் மாணவர்களுக்கு உதவும் தமிழ் நெஞ்சங்கள்!!

வெளிமாநிலத்திற்கு சென்று நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ பலரும் முன்வந்துள்ள நிலையில், நடிகர்கள் பிரசன்னா மற்றும் அருள்நிதி ஆகியோரும் மாணவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
Samayam Tamil Cover_pic
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குவியும் நிதியுதவி


நாளை மறுநாள் ஞாயிறுக்கிழமை (மே 6-ம் தேதி) நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பலருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


நீட் தேர்வு நடைபெற 2 நாள்களே உள்ள நிலையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கு கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா நகரங்களிலும் அதேபோல ராஜஸ்தானிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனால், ஏழை மாணவர்கள் தேர்வு எழுத செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் தவிப்பைக் கருத்தில் கொண்டு சமூக வலைதளங்களில் பல்வேறு தன்னார்வ தொண்டர்கள் உதவி செய்வதாக அறிவித்துள்ளனர்.

மாணவர்களுக்கு உதவும் வகையில் ராஜஸ்தான் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழக மாணவ மாணவிகள் அங்கு சென்றதும் அவர்களுக்குத் தேவையான வாகன உதவி, தங்குவதற்கான வசதி, உணவு, தேர்வு நடைபெறும் இடத்தை அடைவதற்கான உதவி அனைத்தையும் செய்ய முன்வந்துள்ளனர்.

ராஜஸ்தான் செல்லும் மாணவ/மாணவிகள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு உதவியைப் பெறலாம்.

கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்!


திரு. முருகானந்தம் - 9790783187

திருமதி. சௌந்தரவல்லி - 8696922117

திரு.பாரதி - 7357023549


தொடர்ந்து நடிகர் பிரசன்னா, டிவிட்டரில், 'நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்குச் செல்லும் கிராமப்புற மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேருக்கு என்னால் உதவ முடியும். உதவி வேண்டுவோர் உங்களின் விவரங்கள் மற்றும் தேர்வு மையத்தின் விவரங்களை அனுப்பவும். நான் உங்களின் பயண டிக்கெட்டை பதிவு செய்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

அவரை தொடர்ந்து நடிகர் அருள்நிதியும் தனது ட்விட்டரில்பக்கத்தில் ’ஏக்சஸ்ஃபிலிம் நிறுவனம், நானும் இணைந்து வெளிமாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுதும் 20 அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம். தொடர்பிற்கு 9841777077 எண்ணை அழைக்கவும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வெளிமாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு இலவச ரயில் டிக்கெட் மற்றும் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் வெளிமாநிலங்களில் சென்று நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையம் மற்றும் தேர்வு குறித்த சந்தேகங்களை ஏதேனும் இருந்தால் 14417 என்ற இலவச எண்ணில் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்