ஆப்நகரம்

Prasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும் அஜித் ரசிகர்கள்

அஜித்தின் வலிமை படத்தில் தான் நடிக்கவில்லை என்று பிரசன்னா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Jan 2020, 11:55 am
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறாராம். அஜித்துக்கு வில்லனாக பிரசன்னா நடிக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் வலிமையில் பிரசன்னா இல்லை என்று படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார். அது தான் உண்மையாகியுள்ளது.
Samayam Tamil prasanna


தான் வலிமை படத்தில் நடிக்கவில்லை என்று பிரசன்னா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

நான் வலிமை படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பிய அனைவருக்கும் என்று நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் கெரியரின் மிகப் பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று நம்பினேன். ஆனால் நம்ம தலயுடன் சேர்ந்து நடிக்கும் அருமையான வாய்ப்பு இம்முறை கிடைக்கவில்லை.

அடுத்த முறை நிச்சயம் நடக்கும். விரைவில் நான் தலக்கு வில்லனாக நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.


Ajith அஜித்துக்கு பிரச்சனை செய்ய காத்திருக்கும் பிரசன்னா?

பிரசன்னாவின் ட்வீட்டை பார்த்த அஜித் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

வருத்தப்பட வேண்டாம் ப்ரோ. தலயுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும். எங்கள் அன்பும், ஆதரவும் உங்களுக்கு எப்பொழுதுமே உண்டு.

Ajith அஜித் ஜோடி இலியானாவும் இல்ல, யாமியும் இல்ல, ரஜினி ஹீரோயின்

உங்களை போன்றே எங்களுக்கும் வருத்தமாகத் தான் உள்ளது. நீங்கள் தான் வில்லன் என்று நாங்கள் நினைத்தோம். இப்படியாகிவிட்டது. பரவாயில்லை, அடுத்த முறை பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்