ஆப்நகரம்

சிம்புவுடன் இணையும் பிரேமம் இயக்குநர்!?

சிம்புவுடன் இணையும் பிரேமம் இயக்குநர்!?

TOI Contributor 6 Nov 2016, 2:45 pm
பிரேமம் படத்தின் இயக்குநர் சிம்புவுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil premam director join hand with simbu
சிம்புவுடன் இணையும் பிரேமம் இயக்குநர்!?


மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழக ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. மலையாளம், தமிழ் இரண்டிலும் ஹிட் அடித்த பிரேமம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப்படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டார். இவர் இரண்டாவது படத்தை மலையாளத்தில் எடுத்தாலும் முதல் படமான நேரம் திரைப்படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேமம் படத்தை தொடர்ந்து இவரது அடுத்தப்படம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில் இவர் நடிகர் சிம்புவுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சிம்புவிடம் கதை சொல்லி இருப்பதாகவும், முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தை இவர் தமிழில் மட்டுமே எடுக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்