ஆப்நகரம்

தமிழகத் தூதுவர் ஆகிறார் கீர்த்தி சுரேஷ்; சென்னை ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் அழைப்பு!

ரிலையன்ஸ் டிரெண்ட்ஸின் தமிழகத் தூதுவராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்படும் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Aug 2018, 11:49 pm
சென்னை: ரிலையன்ஸ் டிரெண்ட்ஸின் தமிழகத் தூதுவராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்படும் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Keerthy Suresh


இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 11.30 மணிக்கு ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் சார்பில் செய்தியாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு சென்னை அண்ணா நகரில் வி.ஆர் மாலில் உள்ள ரிலையன்ஸ் டிரெண்ட்ஸில் நடைபெறுகிறது. அதில் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மண்டலத்திற்கு தூதுவராக ‘கீர்த்தி சுரேஷ்’ அறிவிக்கப்பட உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் டிரெண்ட்ஸின் தலைமை செயல் அதிகாரி விபின் தியாகி கலந்து கொண்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறார். இதனைத் தொடர்ந்து பேஷன் ஷோ நடைபெறுகிறது.

PRESS CONFERENCE TO ANNOUNCE KEERTHI SURESH AS TRENDS BRAND AMBASSADOR FOR TN, SOUTH.

அடுத்த செய்தி

டிரெண்டிங்