ஆப்நகரம்

ஒரே நேரத்தில் இரண்டு பெண் இயக்குனர்களுடன் பணிபுரியும் பிருத்விராஜ்!

நடிகர் பிருத்விராஜ், ஒரே நேரத்தில் இரண்டு பெண் இயக்குனர்களின் படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார்.

TNN 18 Nov 2017, 3:06 pm
நடிகர் பிருத்விராஜ், ஒரே நேரத்தில் இரண்டு பெண் இயக்குனர்களின் படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார்.
Samayam Tamil prithviraj is working with two female directors simultaneously
ஒரே நேரத்தில் இரண்டு பெண் இயக்குனர்களுடன் பணிபுரியும் பிருத்விராஜ்!


இயக்குனர் ரோஷினி தினகர், நடிகர் பிருத்விராஜ், நடிகை பார்வதி உட்பட பலரை வைத்து ‘மை ஸ்டோரி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிருவித்ராஜுக்கு ஜோடியாக பார்வதி நடிக்கிறார். நடிகர் பிருத்விராஜ் பெண் இயக்குனர் ஒருவர் படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. ‘மை ஸ்டோரி’ படப்பிடிப்பை ஆரம்பித்த ரோஷினி தினகருடன் பிருத்விராஜூக்கு பாதியில் மனகசப்பு ஏற்பட்டது. பின்னர் இது பஞ்சாயத்து வரை சென்று ஒருவழியாக தற்போது படப்பிடிப்பு மீண்டும் நடைபெற்று வருகிறது.. இந்தப்படத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட இயக்குனர் ரோஷினி தினகர் முடிவு செய்துள்ளார்.

இதேபோல் புகழ்பெற்ற அஞ்சலி மேனன், பிருத்விராஜ் & பார்வதி ஜோடியை வைத்து ‘பெங்களூர் டேய்ஸ்’ என்ற படத்தை இயக்குகி வருகிறார்.. இந்த இரண்டு படங்களிலும் நடிகர் பிருத்விராஜ் மாறி மாறி நடித்து வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்