ஆப்நகரம்

டப் ஸ்மாஷ் வீடியோ மூலம் நித்யானந்தாவை கலாய்த்துள்ள பிரியா பவானி சங்கர்!!

டப் ஸ்மாஷ் வீடியோ மூலம் நிதியானந்தாவை நடிகை பிரியா பவானி சங்கர் கலாய்த்து இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.

Samayam Tamil 25 Sep 2018, 5:21 pm
தமிழ் திரைப்பட உலகில் தற்போது பிரபலமாகி வரும் நடிகை பிரியா பவானி சங்கர் ஆன்மிக குரு என்று தன்னை அறிவித்துக் கொண்ட நித்யானந்தாவை கலாய்த்து டப் ஸ்மாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு கலக்கியுள்ளார்.
Samayam Tamil பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர்பிரியா பவானி சங்கர்


தனியார் தமிழ் டிவி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா சங்கர், அதன் பின்னர் டிவி நாடகங்களில் நடித்து வந்தார். இதையடுத்து, மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்தார். அதர்வாவுடன் நடித்த குருதியாட்டம் திரைக்கு வரவுள்ளது.
View this post on Instagram 🤘🏼😇 A post shared by Priya BhavaniShankar (@actresspriyabshankar) on Sep 23, 2018 at 5:42am PDT
இந்த நிலையில் இவர் நித்யானந்தாவை கிண்டல் செய்து டப் ஸ்மாஷ் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ வெளியான ஒரே நாளில் மட்டும் 2.2 லட்சம் பேர் பார்த்துள்ளனர். நித்யானந்தா குரல் ஒலிக்க, பிரியா டப் ஸ்மாஷ் செய்ய, அதை அவரது நண்பர்கள் கைதட்டி வரவேற்கின்றனர்.

சமூக வலைதளங்களில் எப்போதும் பிசியாக இருக்கும் பிரியா பவானியின் இந்த வீடியோவுக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து டுவிட்டரில் நித்யானந்தா தனது வீடியோக்களை வெளியிட்டு வரும்நிலையில், பிரியா பவானி சங்கரும் இந்த வீடியோவை வெளியிட்டு கலாய்த்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்