ஆப்நகரம்

எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்ட பிரியாமணி

காதலரான தொழிலதிபர் முஸ்தபா ராஜூவை நடிகை பிரியாமணி பெங்களூரில் நேற்று திருமணம் செய்து கொண்டார்.

TNN 24 Aug 2017, 1:17 am
காதலரான தொழிலதிபர் முஸ்தபா ராஜூவை நடிகை பிரியாமணி பெங்களூரில் நேற்று திருமணம் செய்து கொண்டார்.
Samayam Tamil priyamani is now officially married
எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்ட பிரியாமணி


இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதன் பிறகு அது ஒரு கனாக்காலம், தோட்டா, நினைத்தாலே இனிக்கும், மலைக்கோட்டை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அமீர் இயக்கத்தில் வந்த பருத்திவீரன் படத்தில் நடித்ததற்கு பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில், பிரியாமணிக்கும், தொழிலதிபர் முஸ்தபா ராஜூவுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து நேற்று பெங்களூரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இன்று மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளயிருக்கிறார்கள்.



இது குறித்து பிரியாமணி கூறுகையில், நாங்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தோம். அதன் படி, இன்று மாலை திருமணம் நடந்தது. இதையடுத்து நாளை திருமண வரவேற்பு நடக்கிறது. தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்து வருவதால் அதிலிருந்து பின்வாங்க முடியாது. இதனால், திருமணம் முடிந்த இரு நாட்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Priyamani is now officially married to her longtime friend Mustufa. The Paruthiveeran actress got married in a registrar office in Jayanagar, Bengaluru today, August 23. Priyamani got engaged with Mustufa, a Mumbai-based businessman. The couple got engaged in May last year. The ceremony was held on May 27 at Priyamani’s residence in Banashankari, Bengaluru. Finally, they have now entered wedlock in a simple manner attended by close friends and relatives.

அடுத்த செய்தி

டிரெண்டிங்