ஆப்நகரம்

பல கோடிக்கு விலை போன நடிகையின் திருமண புகைப்பட உரிமை!

பிரியங்கா சோப்ராவின் திருமண புகைப்படங்களின் உரிமையை 18 கோடி பிரபல நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது.

Samayam Tamil 17 Nov 2018, 7:34 pm
பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமண புகைப்படங்களின் உரிமையை 18 கோடி பிரபல நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது.
Samayam Tamil பல கோடிக்கு விலை போன நடிகையின் திருமண புகைப்பட உரிமை!
பல கோடிக்கு விலை போன நடிகையின் திருமண புகைப்பட உரிமை!


பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில்இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து வந்தார்.

இதையடுத்து இவர்கள் இருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயத்தார்த்த பரிசாக காதலன் நிக் ஜோன்ஸ், காதலி பிரியங்காவுக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள மோதிரத்தை பரிசாக கையில் அணிந்தார்.அண்மையில் பிரியங்கா சோப்ரா, ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது ரூ. 9 கோடி மதிப்புள்ள நகைகளை அணிந்து வந்தார்.

இந்நிலையில் பிரியங்காவுக்கும், நிக்குக்கும் வரும் டிசம்பர் 1 ல் ஜோத்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது.இவர்களின் திருமண புகைப்படத்தை வெளியிடும் உரிமை ரூ. 18 கோடிக்குவிலை போனது.

திருமணம் முடிந்த கையோடு அமெரிக்காவில் பிரபலங்கள் நிறைந்த பெவர்லி ஹில்ஸ் பகுதியில் தாங்கள் புதிதாக வாங்கிய ஆடம்பர வீட்டில் புது ஜோடி குடியேறவுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்