ஆப்நகரம்

பிரியங்கா சோப்ரா குழந்தைக்கு பேர் வச்சாச்சு... பேர்ல இவ்ளோ ஸ்பெஷல் இருக்கா!

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் தம்பதி தங்களின் பெண் குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர்.

Samayam Tamil 21 Apr 2022, 3:32 pm
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் பிரியங்கா சோப்ரா. பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் பிஸியாக உள்ளார்
Samayam Tamil Priyanka Chopra


கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோனஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது சிறியவர் ஆவார். இந்நிலையில் சமீபத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆகினர்.


தங்களின் சமூக வலைதள பக்கங்களின் மூலம் இருவரும் இதனை அறிவித்தனர். இந்நிலையில் தங்கள் மகளின் பெயரை வெளிப்படுத்தியுள்ளனர் பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனஸும். அதன்படி பிரியங்கா சோப்ராவின் மகளின் முதல் பெயர் மட்டுமே இரண்டு பெயர்களாக உள்ளது.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

அதாவது தங்களின் குழந்தைக்கு Malti Marie Chopra Jonas என பெயர் வைத்துள்ளனர். இதில் “Malti” என்பது பிரியங்கா சோப்ராவின் அம்மா பெயரான Madhumalti Chopra என்பதில் இருந்தும் “Marie” என்பது நிக் ஜோனஸின அம்மாவான Denise Marie Miller Jonas என்பதில் இருந்தும் இடம்பெற்றுள்ளது.

காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும் தங்களின் அம்மாக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தங்கள் குழந்தைக்கு அவர்களின் பெயரை வைத்துள்ளனர். இதனை அறிந்த ரசிகர்கள் இருவருக்கும் பாராட்டு தெரிவித்திருப்பதோடு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
குழப்பத்தில் இருந்த ரஜினி.. போன் போட்ட பிரபல நடிகர்... தலைவர் 169 ரூட் க்ளீயரானதன் பரபர பின்னணி!

அடுத்த செய்தி

டிரெண்டிங்