ஆப்நகரம்

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ப்ரியங்கா!

பிரபல தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா தயாரிக்கும் படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

TOI Contributor 5 Apr 2016, 6:28 pm
பிரபல தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா தயாரிக்கும் படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
Samayam Tamil priyanka chopra in adhithya chopras film
ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ப்ரியங்கா!

பாலிவுட் மட்டுமின்றி, ஹாலிவுட்டிலும் ‘குவாண்டிகோ‘ சீரியல் மற்றும் ‘பேவாட்ச்‘ படத்தில் ஆகியவற்றில் நடிகை பிரியங்கா சோப்ரா பிஸியாக இருக்கிறார், அதனால் பாலிவுட்டில் வேறு படங்களில் அவர் நடிக்கவில்லை.
இந்தச்சூழலில் அஜய் தேவ்கனின் ‘பாத்சாஹோ’ என்ற படத்தில் ப்ரியங்கா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவும் தான் தயாரிக்கும் புதிய படத்தில் ப்ரியங்காவை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்.
ஆதித்யா சோப்ரா, பெண்ணை முதன்மைப்படுத்தி ஒரு படத்தை இயக்க உள்ளது. இதில் ப்ரியங்கா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி அவரிடம் இதுதொடர்பாக பட நிறுவனம் பேசி வருகிறது. முதற்கட்டமாக படத்தின் கதையை ப்ரியங்காவிற்கு இ-மெயில் மூலம் அனுப்பியிருக்கிறார்கள். கதையை படித்து ஒரு நல்ல ரிசல்டை தருவார் என்ற முடிவில் உள்ளனர் படத் தயாரிப்பாளர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்