ஆப்நகரம்

‘இந்தியன் 2’ படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் தயாரிப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

TNN 21 Oct 2017, 3:54 pm
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் தயாரிப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil producer changed to indian 2 movie
‘இந்தியன் 2’ படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்!


பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் & கமல் கூட்டணியில் வெளியான வெற்றிப் படம் ‘இந்தியன்’. பல வருடங்கள் கழித்து தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தை ஷங்கர் இயக்கவுள்ளார். படத்தின் நாயகனாக கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இப்படத்தை தில் ராஜு தயாரிக்க இருப்பதாக ஷங்கரே, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். ஆனால் இப்படத்தை தற்போது லைகா நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுளளன. மேலும் ஷங்கர் படத்திற்கு ரவி வர்மன் தான் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் படத்தை பற்றி தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்