ஆப்நகரம்

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு 6 பேர் போட்டி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு 6 பேர் பேட்டியிடுகின்றனர்.

TNN 6 Feb 2017, 6:44 pm
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு 6 பேர் பேட்டியிடுகின்றனர்.
Samayam Tamil producer council election six members file nomination
தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு 6 பேர் போட்டி!


தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற மார்ச் 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. அதன் பிறகு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது. இன்று (6ம் தேதி) காலை 11 மணியிலிருந்து 8ம் தேதி மாலை 4 மணிக்குள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். 8ம் தேதி மாலை 6 மணிக்கு இறுதி பட்டியல் அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு தற்போதைய செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் கேயார், ஜி.சேகரன், நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ் ஆகிய 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.செயலாளர் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், ஏ.எல்.அழகப்பன், எஸ்.கதிரேசன், டி.சிவா, ஞானவேல்ராஜா, ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், மிஷ்கின் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

பொருளாளர் பதவிக்கு டி.ஜி.தியாகராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயமுரளி, பாபுகணேஷ், எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் போட்டியிடுகிறார்கள். துணை தலைவர் பதவிக்கு கே.ராஜன், பவித்ரன், சுரேஷ் காமாட்சி, பிரகாஷ்ராஜ், கவுதம், ஏ.எம்.ரத்னம், பி.டி.செல்வகுமார், எஸ்.ரங்காரெட்டி, அபினேஷ் இளங்கோவன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 21 பேர் கொண்ட செயற்குழுவிற்கு 98 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்றும், நாளையும் பலர் போட்டியிலிருந்து விலகுவார்கள் என்று தெரிகிறது.

எந்த அணியில் யார் யார் போட்டியிடுவார்கள் என்பது 8ம் தேதி மாலை தான் தெரியும். பிரகாஷ்ராஜும், டி.சிவாவும் இரண்டு பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் கண்டிப்பா ஒரு வேட்புமனுவை வாபஸ் பெறுவார்கள். விஷால் மனு நிறுத்தி வைப்பு மீது நீதிமன்றம் இன்று தனது முடிவை அறிவிக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்