ஆப்நகரம்

'உங்கள் பிறந்தநாள் உலகத் தமிழருக்கு பெருநாள்': நடிகர் விஜய்க்கு பிரபல தயாரிப்பாளர் புகழாரம்!

வருகின்ற ஜுன் 22 விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் பிறந்தநாள் போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.

Samayam Tamil 17 Jun 2021, 7:14 pm
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இவரின் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம், திரையரங்கை திருவிழா போல் மாற்றுவார்கள் விஜய்யின் ரசிகர்கள். இந்நிலையில் ஜுன் 22 ஆம் தேதி வரப் போகின்ற விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட இப்போது தயாராகி வருகின்றனர் அவரின் ரசிகர்கள்.
Samayam Tamil Actor_Vijay
Actor_Vijay


நடிப்பு, ஸ்டைல், நடனம், ஆக்‌ஷன், பாடல் என அனைத்திலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார் விஜய். ஒவ்வொரு பிறந்தநாளிலும் விஜய்யின் வயது குறைந்து, இளமை கூடுவதை போல் அவரின் நடை, உடை, பாவனை, தோற்றம் அனைத்திலும் ஒரு இளமை எட்டி பார்க்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்க்கும், ஆதர்ச நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் விஜய்.

இந்நிலையில் வருகின்ற ஜுன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளைக் கொண்டாட தயாராகி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். வழக்கமாக அவரின் பிறந்தநாளின் போது நலத்திட்ட உதவி, உணவு, ரத்த தானம் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபடுவார்கள் விஜய் ரசிகர்கள். மற்றொரு புறம் இணையத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் அவரது பிறந்தநாள் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடுவார்கள்.
பெண் என்பதால் குறி வைக்கப்பட்டேன்: போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஆதங்கம்!
இந்நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, 'உங்கள் பிறந்தநாள், திரையுலகின் திருநாள், உலகத் தமிழருக்கு பெருநாள், வாழ்க வளமுடன், வாழ்த்தும் வி கிரியேஷன்ஸ்' எனக் குறிப்பிட்டு பிறந்தநாள் போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் 'ஐகான் ஆஃப் மில்லியன்ஸ்’ எனக் குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். அவரது பிறந்த நாள் அன்று தளபதி 65 குறித்த ஏதேனும் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கின்றனர் விஜய் ரசிகர்கள். அதேபோல் தளபதி 66 படம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்