ஆப்நகரம்

அஜித்தை பின்பற்றிய ஜெய்யை, கண்டித்த தயாரிப்பாளர்

ஜெய் ஒன்றும் தல அஜித் அல்ல. இப்படியே செய்து கொண்டு இருந்தால் சினிமாவை விட்டு காணாமல் போய்விடுவார் என்று தயாரிப்பாளர் சிவா கூறியுள்ளார்.

TNN 15 Sep 2016, 11:36 am
சென்னை – 600028 படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில், சிவா, ஜெய், வைபவ், மஹத், விஜயலட்சுமி, பிரேம்ஜி, தயாரிப்பாளர் சிவா, நிதின் சத்யா ஆகியோர் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சென்னை – 600028 பார்ட் 2. யுவன் இசையமைத்துள்ள இப்படம் நவம்பர் 10ம் தேதி திரைக்கு வரயிருக்கிறது.
Samayam Tamil producer siva warns actor jai
அஜித்தை பின்பற்றிய ஜெய்யை, கண்டித்த தயாரிப்பாளர்


இந்நிலையில் சென்னையில் நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் ஜெய் உள்பட சிலர் கலந்துகொள்ளவில்லை. ஜெய் தொடர்ந்து பட நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சிவா, அஜித் மட்டும் தான் படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளமாட்டார். அதனை தவறாக புரிந்து கொண்ட நான், அது போன்று அஜித் செய்வதால், அவரின் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று நான் புரிந்து கொண்டேன்.

ஆனால், இப்போதே சில வளர்ந்து வரும் நடிகர்கள் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை புறக்கணித்து வருகின்றனர். இது போன்று ஜெய் தொடர்ந்து செய்து வந்தால், சினிமாவை விட்டே காணாமல் போய்விடுவார் என்று சிவா கண்டித்துள்ளார். இந்த செயலை ஜெய் திருத்திக்கொள்ள வேண்டும் என்று சிவா அறிவுரை கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்