ஆப்நகரம்

Maanaadu Movie: ராஜாவா வந்த சிம்புவுக்கு வந்த சோதனை: மாநாடு கைவிடப்பட்டதா?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

Samayam Tamil 20 Mar 2019, 1:54 pm
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
Samayam Tamil STR


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. அண்மையில், இவரது நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பெயருக்கு ஏற்றாற்போல் கொண்ட டைட்டிலான வந்தா ராஜாவாத்தான் வருவேன் என்ற படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகரகளிடையே போதுமான வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து பார்ட்டி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 3ம் தேதி சிம்புவின் பிறந்தநாளன்று இப்படத்திற்கு பூஜை போடப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இன்னும் மாநாடு படத்திற்கு பூஜை போடவில்லை. அதோடு, படப்பிடிப்பும் தொடங்கப்படவில்லை. இதனால், படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.



இதற்கு தற்போது விளக்கம் கொடுக்கும் வகையில், மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: படம் கைவிடப்பட்டதாக வெளியான வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். மாநாடு படம் திட்டமிட்டப்படி எடுக்கப்படும். அதற்கான புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாநாடு படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்