ஆப்நகரம்

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: விஷாலின் மனு நிறுத்தி வைப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விஷால் தாக்கல் செய்த மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

TNN 5 Feb 2017, 10:22 am
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விஷால் தாக்கல் செய்த மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil producers council poll vishals nomination papers put on hold
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: விஷாலின் மனு நிறுத்தி வைப்பு


வருகிற மார்ச் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட நடிகர் விஷால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு 6 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், விஷாலின் மனு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். விஷாலின் மனுவை எதிர்த்து சங்க நிர்வாகிகள் நீதிமன்றத்துக்கு செல்லவிருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விஷாலின் மனுவை ஏற்பது தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி முடிவு எடுக்கப்படும் என்றும் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாளை (பிப்.6) திங்களன்று இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் விஷாலின் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வருகிற பிப்.8ஆம் தேதி வெளியிடப்படும். இந்தத் தேர்தலில் 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 99 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 2 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

A team formed by South Indian Artists' Association general secretary Vishal has filed nominations for the upcoming Tamil Film Producers Council elections scheduled for March 5.

அடுத்த செய்தி

டிரெண்டிங்