ஆப்நகரம்

”காற்று வெளியிடைனா என்ன?” -வைரலாகும் வீடியோ..!

காற்று வெளியிடைனா என்ன ? என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட பிரமோஷனல் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

TNN 5 Apr 2017, 2:58 pm
காற்று வெளியிடைனா என்ன ? என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட பிரமோஷனல் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Samayam Tamil promotional video kaatru veliyidai na enna goes viral in social media
”காற்று வெளியிடைனா என்ன?” -வைரலாகும் வீடியோ..!


சமீப காலமாக புதிய படங்களுக்கு பிரமோஷனல் நிகழ்ச்சிகள் நடத்துவது மட்டுமின்றி, பிரமோஷனல் வீடியோ எடுக்கும் கலாச்சாரமும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளது. இதற்கு முன்னர் பிச்சைக்காரன், ஜில் ஜங் ஜக், மிருதன் ஆகிய படங்களுக்காக எடுக்கப்பட்ட பிரமோஷனல் வீடியோக்கள், சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போட்டன.

இந்நிலையில் நாளை மறுநாள் வெளியாக உள்ள “ காற்று வெளியிடை” திரைப்படத்திற்காக “காற்று வெளியிடைனா என்ன?” என்ற தலைப்பில் பிரமோஷனல் வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மணி ரத்னத்தின் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள், காற்று வெளியிடை என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை கேட்கும்படியாக, நகைச்சுவையாக இந்த பிரமோஷனல் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அந்த வீடியோ உங்களுக்காக..!



Promotional Video Kaatru veliyidai Na Enna goes viral in social media

அடுத்த செய்தி

டிரெண்டிங்