Ps 2: Ponniyin Selvan 2 Film Box Office Collection In 3 Days
Ponniyin Selvan 2: மூன்று நாட்களில் 'பொன்னியின் செல்வன் 2' வசூல்... ஆனா அதைவிட 100 கோடி ரூபாய் கம்மியாம்!
Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் 3 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil1 May 2023, 12:42 pm
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் முதல் 3 நாட்களில் 130 கோடி ரூபாய்க்கு மேல் வசூர் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் வசூல்
வரலாற்று காவியமான 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் முதல் பாகம் பிளாக் பஸ்டர் ஹிட்டான நிலையில் இரண்டாம் பாகமும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து சக்கை போடு போட்டு வருகிறது. படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கில் 11 கோடி ரூபாய் வசூலானதாக கூறப்பட்ட நிலையில் முதல் நாளில் 50 கோடி ரூபாய் வசூலை குவித்தது. Vidaamuyarchi: கனவு நனவாகும் தருணம்... கண்டிப்பா சம்பவம் இருக்கும்... வைரலாகும் மகிழ் திருமேனி டிவிட்!
ஏப்ரல் 30-ம் தேதி உலகம் முழுவதும் படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை 3-வது நாளில் படம் ரூ.30 கோடி வசூல் செய்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மே 1 ஆம் தேதி இன்றும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், படம் திரையிடப்பட்ட முதல் வாரத்தில் ரூ 200 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது. இப்படம் அமெரிக்காவில் 3 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் வட அமெரிக்காவில் வசூல் செய்த படங்களில் முதல் 8 இடங்களுக்குள் ஒன்றாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்துடன் ஒப்பிடுகையில், படத்தின் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பொறுத்தவரையில் வெற்றிபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகமான 'பொன்னியின் செல்வன் 1' முதல் 3 நாட்களில் ரூ 230 கோடி வசூலித்தது. ஆனால் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் முதல் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் குறைவாக 130 ரூபாய்தான் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Jyothika: 44 வயசுல இப்படியா... ஜோதிகா ஷேர் செய்த ஒத்த வீடியோ... பிரமித்து போன பிரபலங்கள்!
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.