ஆப்நகரம்

சரக்கடித்து விட்டு வண்டி ஓட்டிய சுனிதாவை சரமாரியாக விளாசிய பொதுமக்கள்!!

விஜய் டிவியின் பிரபல டான்சரான சுனிதா, குடிபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Samayam Tamil 31 May 2018, 8:00 pm
விஜய் டிவியின் பிரபல டான்சரான சுனிதா, குடிபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Samayam Tamil சரக்கடித்து விட்டு வண்டி ஓட்டிய சுனிதாவை சரமாரியாக விளாசிய பொதுமக்கள்!!
சரக்கடித்து விட்டு வண்டி ஓட்டிய சுனிதாவை சரமாரியாக விளாசிய பொதுமக்கள்!!


விஜய் டிவியில் ஒளிப்பரப்பான டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சுனிதா. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா, அதன்பின் டான்ஸ் ஷோ மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்தார்.பின்னர், தனுஷ் நடித்த ‘3’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தோழியாகவும் நடித்தார்.

விஜய் டிவி டான்சர் சுனிதா


இந்நிலையில், இவர் குடிபோதையில் கார் ஒட்டி விபத்து ஏற்படுத்தியதாக வீடியோ ஒன்று இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து பதிலளித்த அவர், “எனக்கு குடிபழக்கம் கிடையாது. கார் ஓட்டவும் தெரியாது. எப்போதும் எனது ஓட்டுநர்தான் காரை ஓட்டுவார். அவரும் குடித்துள்ளாரா என்பதை பார்த்த பின்னே காரை ஓட்ட அனுமதிப்பேன்.

அன்று நான் வண்டியின் பின்பக்க சீட்டில் தூங்கிக்கொண்டிருந்தேன். விபத்து ஏற்பட்டதும் பொதுமக்கள் நான் குடித்துவிட்டு வண்டி ஒட்டியதாக நினைத்து என்னை விமர்சனம் செய்தனர். எனக்கு மொழி தெரியாததால், அவர்களிடம் பேசி புரியவைக்க முடியவில்லை. விபத்தில் அடிப்பட்டவரையும் பார்த்தேன். அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. தவறு எனது கார் ஓட்டுநர் மீதுதான்,” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்