ஆப்நகரம்

கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையிலும் போராடும் பாடகர்: புத்தகம் வெளியிட்ட பந்த் சிங்!

ஜீவா மற்றும் நடாஷா சிங் நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, பஞ்சாபைச் சேர்ந்த பாடகர் பந்த் சிங்கின் புக் வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 May 2019, 12:54 pm
ஜீவா மற்றும் நடாஷா சிங் நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, பஞ்சாபைச் சேர்ந்த பாடகர் பந்த் சிங்கின் புக் வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil bandh


இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங், சன்னி வெயின், சுஷீலா ராமன், சஞ்சய் மிஸ்ரா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜிப்ஸி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில், படக்குழுவினர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பாடகர் பந்த் சிங்கும் கலந்து கொண்டார். கடந்த 2000ம் ஆண்டில், இவரது இளைய மகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பந்த் சிங் நீதி கேட்டு போராட்டத்தை தொடங்கினார். எனினும், இக்குற்றத்தில் ஈடுபட்ட ஜாட் சாதி பண்ணையார்களுக்கு 2002ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இதனால், பாதிக்கப்பட்ட குற்றவாளிகள் பந்த் சிங்கை பழி தீர்க்கும் வகையில், இரு கைகள் மற்றும் ஒரு காலை வெட்டி எடுத்துள்ளனர். மற்றொரு காலிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட பந்த் சிங் தனது குரலால், கடுமையான வரிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

இதற்கிடையில், இன்று நடந்த ஜிப்ஸி படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, பந்த் சிங்கின் புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்