ஆப்நகரம்

பாமக நிறுவனர் ராமதாஸுடன் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி சந்திப்பு!!

கவின் கலை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனப் பிரச்சனையில், தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸை புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்புசாமி ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

Samayam Tamil 26 Feb 2018, 1:14 am
கவின் கலை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனப் பிரச்சனையில், தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸை புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்புசாமி ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
Samayam Tamil pushpavanam kuppusamy and anitha kuppusamy thanked pmk founder ramadoss
பாமக நிறுவனர் ராமதாஸுடன் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி சந்திப்பு!!


இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக துணைவேந்தா் பதவி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக நாட்டுப்புற பாடகா் புஷ்பவனம் குப்புசாமி குற்றம் சாட்டியதையடுத்து, அவரது மனைவி அனிதா குப்புசாமி அதிமுக கட்சியிலிருந்து விலகினார்.

இப்பிரச்சனை பூதாகரமானதையடுத்து, அதிமுக அரசு பல்கலைக்கழக நியமனங்களில் முறைகேடு செய்வதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த முறைகேடு பிரச்சனை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

இந்நிலையில், தங்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட ராமதாஸை புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்