ஆப்நகரம்

தேனி மாவட்டத்தில் போலி மருத்துவர் கைது!

தேனியில் உடல்நிலை சரியில்லாமல் வந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

TNN 20 Nov 2017, 8:50 pm
தேனியில் உடல்நிலை சரியில்லாமல் வந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil quack arrested in tamil nadu
தேனி மாவட்டத்தில் போலி மருத்துவர் கைது!


தேனி மாவட்டம் வயல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மொட்டையாண்டி மகன் மூர்த்தி (49). வெறும் பத்தாவது மட்டுமே படித்துள்ள இவர் அப்பகுதியில் உள்ள கிளினிக் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும், கிளினிக் திறப்பதற்கு முன்பாக கிளினிக்கை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், வீரபாண்டியைச் சேர்ந்த பொன்னம்மாள் என்பவர் தீராத காய்ச்சலால் மூர்த்தியின் கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அப்போது மூர்த்தி அவருக்கு ஊசி மற்றும் மருந்து மாத்திரைகள் கொடுத்துள்ளார். இதையடுத்து, உடல்நிலை சரியில்லாமலும், ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்ட நிலையிலும் கிளினிக்கிற்கு சென்றுள்ளார்.

அப்போது, மூர்த்தி, அந்த இடத்தை நன்றாக தேய்த்து விடுங்கள். ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். ஆனால், வீக்கம் அதிகமாகிக் கொண்டே இருந்துள்ளது. தொடந்து சனிக்கிழமை சென்ற அவரிடம் சில ஆயிரம் ரூபாய்களை வாங்கியுள்ளார். இதையடுத்து, வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் நேற்று மூர்த்தியை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

Police on Monday arrested a 49-year-old quack, who has been running a clinic at Vayalpatti in Theni district of Tamil Nadu for several years.

அடுத்த செய்தி

டிரெண்டிங்