ஆப்நகரம்

குயின் தமிழ் ரீமேக்கில் காஜல்!

தமிழில் ‘குயின்’னாக வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.

TNN 28 Aug 2017, 4:34 pm
தமிழில் ‘குயின்’னாக வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.
Samayam Tamil queen tamil remake kajal will play a pivot role
குயின் தமிழ் ரீமேக்கில் காஜல்!


இயக்குனர் விகாஸ் பகால் இந்தியில் இயக்கிய வெற்றி பெற்ற படம் ‘குயின்’. இந்தப் படம் 2014 மார்ச்சில் வெளியானது. இந்தப் படத்தில் குயினாக நடித்தவர் நடிகை கங்கனா ரணாவத். இந்தியில் இப்படம் வெளியான சமயத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை முதலில் நடிகை ரேவதி இயக்குவதாக இருந்தது. அதன் பின் ரமேஷ் அரவிந்த் இப்படத்தின் இயக்குனரானார். இப்படி ஏதோ ஒரு காரணத்தால் படம் தொடங்க தாமதம் ஏற்பட்டதால், இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்த தமன்னா விலகிவிட்டார். கங்கனா ரானவத் கதாபாத்திரத்தில் தற்போது காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தின் கதையை தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களை செய்துள்ளார் ரமேஷ் அரவிந்த். மதுரையில் விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். அதைத் தொடர்ந்து லண்டன் மற்றும் பாரீஸில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்