ஆப்நகரம்

Jayalalithaa Web Series Trailer குயீன் ட்ரெய்லரே சும்மா அதிருதே, வெப் சீரிஸ் எப்படி இருக்கும்!!

குயீன் வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 6 Dec 2019, 8:52 am
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்கிற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கவுதம் மேனன் ரம்யா கிருஷ்ணனை வைத்து குயீன் என்கிற வெப் தொடரை எடுத்து வருகிறார்.
Samayam Tamil ramya krishnan


ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கும் குயீன் தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் ஜெயலலிதா சந்தித்த வெற்றிகள், தோல்விகள், வலியை காண்பித்துள்ளார் கவுதம். இளம் வயது ஜெயலலிதாவாக விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா நடித்து்ளார்.

ட்ரெய்லரை பார்க்கும் போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்க்கும் ஒரு உணர்வு ஏற்படுகிறது. ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா போன்று குண்டாக இருக்க வேண்டும் என்பதற்காக கவுதம் மேனன் ப்ராஸ்தெடிக்ஸ் மேக்கப்பை நம்பாதது ஆறுதலான விஷயம்.



தாயாக குழந்தை பெற வேண்டும் என்று இல்லை என்ற வாசகம் அருமை. மேலும் இது வெறும் துவக்கம் தான் என்று ரம்யா கிருஷ்ணன் சொல்வது அழகாக உள்ளது.

குயீன் ட்ரெய்லரை பார்த்தவர்கள்க கூறியிருப்பதாவது,

Queen ஜெ. மாதிரியே கம்பீரமாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன்: குயீன் போஸ்டர் மாஸ்

ரம்யா கிருஷ்ணனை பார்க்கும்போது ஜெயலலிதாவை பார்த்தது போன்று இருக்கிறது. ஜெயலலிதாவின் கம்பீரம் யாருக்கும் வராது என்றாலும் ரம்யாவின் முயற்சி பாராட்டுக்குரியது. கவுதம் மேனன் குயீன் தொடரை அழகாக இயக்கியுள்ளார் என்பதற்கு இந்த ட்ரெய்லரே உதாரணம்.

உடனே குயீன் தொடரை பார்க்க வேண்டும் போல் உள்ளது. கவுதம் மேனனின் கலைஞர்கள் தேர்வு அருமை. தலைவி போன்று ரம்யாவை காமெடி பீஸாக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

ட்விட்டரில் வெங்காயத்தை வீழ்த்தி டாப்பில் டிரெண்டான வேதிகா: ஏன் தெரியுமா?

அடுத்த செய்தி

டிரெண்டிங்