ஆப்நகரம்

”ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தவறு”- நடிகர் விஷால் கருத்து..!

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தவறு என நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.

TNN 10 Apr 2017, 11:52 am
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தவறு என நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil r k nagar by election cancelled is not a good decisionsays actor vishal
”ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தவறு”- நடிகர் விஷால் கருத்து..!


விக்ரம் பிரபு நடித்துள்ள “நெருப்புடா” படத்தின் பாடல் வெளியீட்டு விழா,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகரும், தமிழ் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கலந்து கொண்டார்.

விழா முடிந்ததும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஷால், சமூக வலைத்தளங்களில் புதுப்படங்கள் குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு தனது கண்டனங்களை தெரிவித்தார். “வெறும் போஸ்டரை மட்டும் வைத்துக் கொண்டு, படம் வெளியான முதல் நாளிலேயே பலர் சமூக வலைத்தளங்களில் தவறாக விமர்சனம் செய்கின்றனர். இதனால் அந்த படத்திற்கு மக்களிடம் கிடைக்க வேண்டிய வரவேற்பு பாதிக்கப்படுகிறது.

விமர்சனம் செய்வதை தவறு என கூறவில்லை. ஆனால் சில நாட்கள் பொறுத்து, படத்தின் வசூல் எப்படி இருக்கிறது, ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையெல்லாம் ஆராய்ந்து விமர்சனம் செய்ய வேண்டும். கூடிய விரைவில் திரைப்படங்கள் குறித்த விமர்சனத்தை வரையறைபடுத்த முயற்சி மேற்கொள்ள உள்ளோம்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஒரு வாக்காளராக பார்க்கும் போது தவறு என்றே தோன்றுகிறது. யாரோ இரண்டு பேர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த தேர்தலையும் ரத்து செய்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ” என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

R.K Nagar by election cancelled is not a good decision,says Actor Vishal

அடுத்த செய்தி

டிரெண்டிங்