ஆப்நகரம்

உதயநிதியை மிரட்டும் வில்லன் ஆர்.கே.சுரேஷ்!

ஆர்.கே.சுரேஷ், உதயநிதியை மிரட்டும் வில்லனாக ஒரு படத்தில் நடிக்கிறார்.

TOI Contributor 8 Sep 2016, 3:33 pm
ஆர்.கே.சுரேஷ், உதயநிதியை மிரட்டும் வில்லனாக ஒரு படத்தில் நடிக்கிறார்.
Samayam Tamil r k suresh acts with udhyanidhi as villain
உதயநிதியை மிரட்டும் வில்லன் ஆர்.கே.சுரேஷ்!


எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஆர்.கே. சுரேஷ் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் படம் அதற்கு முன் கமிட் ஆன படம். ஆகையால் இந்தப் படத்தில் உதயநிதியை மிரட்டும் வில்லனாக நடிக்கிறார்.

கிராமத்தை பின்னணியாக கொண்ட இந்தப் படத்தில் கிராமத்து மக்களை மிரட்டும் சண்டியராக நடிக்கிறார் சுரேஷ். கிராமத்து சண்டியர் வில்லனுக்கு ஹீரோ உதயநிதி எப்படியெல்லாம் ஆட்டம் காட்டுகிறார் என்பதுதான் படத்தின் கதை. தற்போது படப்பிடிப்பு காரைக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது. படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தில் இரண்டு கதாநாயகிகள். ரெஜினா மற்றும் சிருஷ்டி டாங்கே. இவர்களுடன் டைரக்டர் ரவிமரியா, சூரி ஆகியோரும் நடிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்