ஆப்நகரம்

பிரபு தேவாவை வைத்து இயக்கவுள்ள பார்த்திபன்!

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், நடிகர் பிரபுதேவாவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

Samayam Tamil 11 Apr 2018, 3:31 pm
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், நடிகர் பிரபுதேவாவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
Samayam Tamil parthi-prabhu


நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த படம் ‘உள்ளே வெளியே’. இந்தப் படம் 1993ல் ஏப்ரல் 16ம் தேதி வெளியானது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் நடிகர் பார்த்திபன். இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, பிரபுதேவாவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் பார்த்திபன். பிரபுதேவாவிடம் கதை சொல்லி, சம்மதம் வாங்கி விட்டார் நடிகர் பார்த்திபன்.

தற்போது நடிகர் பிரபு தேவா, ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்துவருகிறார். அடுத்து சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ‘தபாங்’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், மானை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளதால், உடனடியாகப் படம் தொடங்குமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்