ஆப்நகரம்

சினிமா ஆணாதிக்கம் நிறைந்த துறை.. அனுஷ்கா, சமந்தா போல் இருக்க வேண்டும்: நடிகை ராஷி கண்ணா பளிச்!

தெலுங்கு சினிமாவில் நீடிக்க வேண்டும் என்றால் நடிகைகள் அனுஷ்கா மற்றும் சமந்தா போல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் நடிகை ராஷி கண்ணா.

Samayam Tamil 22 Jun 2021, 12:54 pm
தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் நாயகியாக வளர்ந்து வருபவர் நடிகை ராஷி கண்ணா. தமிழில் இவர் விஷால் ஜோடியாக அயோக்யா திரைப்படத்திலும், விஜய் சேதுபதி ஜோடியாக சங்கத்தமிழன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிகை சமந்தா மற்றும் அனுஷ்கா குறித்து அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Raashi_Khanna
Raashi_Khanna


அண்மையில் ஐஏஎன்எஸ் நிறுவனத்துக்கு நடிகை ராஷி கண்ணா அளித்த பேட்டியில், நான் படங்களில் நடிக்கத் தொடங்கியபோது ’ஊஹலு குஸகுஸலடே’ படத்தின் மூலம் நல்ல நடிகை என்ற பெயர் எனக்குக் கிடைத்தது. ஆனால், அதன்பிறகு கிடைத்தவை எல்லாம் கமர்ஷியல் படங்களே. அதன் பிறகு ‘தோழி ப்ரேமா’ படம்தான் அனைத்தையும் மாற்றி எனக்கு நடிக்கவும் தெரியும் என்று மக்களுக்குத் தெரியச் செய்தது.

Beast Mode: தளபதி விஜய்க்கு தரமான பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய நடிகர் தனுஷ்!
தெலுங்கு சினிமாவில் நீங்கள் நிலைக்க வேண்டுமென்றால், அனுஷ்கா அல்லது சமந்தா போல ஒரு நல்ல நடிகையாக இருக்கவேண்டும். இவர்கள் இருவரையும் ரோல் மாடலாக கூட எடுத்து கொள்ளலாம். மேலும் அனுஷ்கா, சமந்தா இருவரும் தென்னிந்திய நடிகைகள் குறித்து மக்கள் மத்தியில் இருந்த பார்வையை மாற்றியவர்கள்.

அதற்கு முன்பெல்லாம் நடிகை என்றால் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும், பாடல் காட்சிகளில் நன்றாக நடனம் ஆட வேண்டும் என்றிருந்தது. ஆனால், இப்போது நல்ல நடிகையாகவும் இருக்கவேண்டும் என்று மாறியுள்ளது. தென்னிந்தியாவிலும் ஏராளமான நல்ல நடிகைகள் இருக்கின்றனர். நான் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என நினைக்கிறேன். இவ்வாறு அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் நடிகை ராஷி கண்ணா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்