ஆப்நகரம்

விஜய்யை சந்தித்து அரசியல் குறித்து பேசிய நடிகர் ராதாரவி!

நடிகர் ராதாரவி, திடீரென நடிகர் விஜய்யை சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றி பேசியுள்ளார்.

Samayam Tamil 31 Mar 2018, 1:28 pm
நடிகர் ராதாரவி, திடீரென நடிகர் விஜய்யை சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றி பேசியுள்ளார்.
Samayam Tamil vijay-radha-ravi


தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாத காலமாக வேலை நிறுத்தம் நடைபற்று வருகிறது. இந்நிலையில் எந்தப் புதிய படமும் வெளியாகவில்லை. அதே மாதிரி எந்தப் புதிய படம் ஆரம்பமாகவில்லை. இந்நிலையில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படம் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் படத்தில் அரசியல் வில்லனாக நடிகர் ராதாரவி நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படப்பிடிப்பின்போது விஜய்யும் ராதாரவியும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது டுவிட்டரில் வெளியாகி டிரெண்டில் உள்ளது. மேலும் நடிகர் ராதாரவி சமீபத்தில் திமுகவில் இணைந்து தீவிர அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில் ராதாரவியுடன் விஜய் அரசியல் குறித்து பல விஷயங்கள் பேசியதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்