ஆப்நகரம்

'ராதே ஷ்யாம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: உற்சாகத்தில் பிரபாஸ் ரசிகர்கள்!

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் 'ராதே ஷ்யாம்' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 30 Jul 2021, 12:21 pm
ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் ராதே ஷ்யாம். இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சாஹோ' படத்தைத் தயாரித்த யு.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Samayam Tamil ராதே ஷ்யாம்
ராதே ஷ்யாம்


பல மாதங்களாக நடைபெற்று வந்த ராதே ஷ்யாம் படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பணிகள் துவங்கியது. நேற்றுடன் ராதே ஷ்யாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'ராதே ஷ்யாம்' படம் வெளியாகவுள்ளது.

ராதே ஷ்யாம் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்ட போது ஆரம்பத்தில் இந்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவித்திருந்தனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்ட தேதியில் படத்தை வெளியிட இயலவில்லை. இந்நிலையில் தற்போது 'ராதே ஷ்யாம்' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

'சென்னை எக்ஸ்பிரஸ்' பட பஞ்சாயத்து: ரோஹித் ஷெட்டியிடம் மன்னிப்பு கோரிய 'பிரேமம்' பட இயக்குனர்!
ராதே ஷ்யாம் படத்தின் ஹீரோவான நடிகர் பிரபாஸ் படத்தின் ரிலீஸ் தேதியை தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி ராதே ஷ்யாம் படம் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும், மேலும் படம் திரையரங்கில்தான் படம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். இதனால் டபுள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர் பிரபாஸ் ரசிகர்கள். இந்த அறிவிப்பிற்காக படக்குழுவினர் வெளியிட்டுள்ள போஸ்டரும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்