ஆப்நகரம்

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் குறித்து தாறுமாறாக பேசிய ராதிகா ஆப்தே!!!

தோனி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே.

TNN 11 Feb 2017, 3:24 pm
தோனி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே.
Samayam Tamil radhika apte attacks tamil cinema directors they dont respect heroines
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் குறித்து தாறுமாறாக பேசிய ராதிகா ஆப்தே!!!


பாலிவுட், டோலிவுட் என்று கலக்கி வரும் ராதிகா ஆப்தே அவ்வப்போது ஆபாச படங்களில் நடித்தும், பேட்டிகளில் சர்ச்சை விஷயங்களை பேசியும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடியவர்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழ்ப்பட இயக்குனர்கள் குறித்து தாறுமாறான கருத்துக்களை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் ஹீரோக்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஹீரோயின்களை கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஹீரோக்களுக்கு நட்சத்திர ஹோட்டல்களிலும், ஹீரோயின்களுக்கு சாதாரண ஹோட்டல்களிலும் ரூம் புக் செய்வார்கள்.

அதேபோல் படப்பிடிப்பு தளத்திற்கு ஹீரோக்கள் எவ்வளவு நேரம் லேட்டாக வந்தாலும் ஒன்றும் சொல்லமாட்டார்கள். ஆனால், ஹீரோயின்கள் எப்போதும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக வந்திருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள்.

மேலும், கபாலி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மட்டும் இயக்குனர் ரஞ்சித்தும், ரஜினிகாந்தும் மட்டுமே தமக்கு மரியாதை அளித்தார்கள். மற்ற படங்களில் எனக்கு மரியாதை அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

Radhika apte attacks tamil cinema directors, they don’t respect heroines

அடுத்த செய்தி

டிரெண்டிங்