ஆப்நகரம்

மீண்டும் வைரலாகி வரும் நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண புகைப்படம்!

கபாலி புகழ் நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண புகைப்படம் மீண்டும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 14 Aug 2016, 9:39 pm
கபாலி புகழ் நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண புகைப்படம் மீண்டும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil radhika aptes leaked nude scene from parched
மீண்டும் வைரலாகி வரும் நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண புகைப்படம்!


கடந்தாண்டு நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாணப் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. ''என்னுடைய புகைப்படங்கள் அல்ல'' என்று ராதிகா ஆப்தே மறுப்பும் தெரிவித்தார். இறுதியில் அவர் நடித்த எதோ ஒரு படத்தில் இருந்து லீக் ஆன புகைப்படம் அவை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ''பார்ச்டு'' என்ற படத்தில் அவர் நடித்த நிர்வாண புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் அதில் ஹுசைனுடன் காதல் முத்தம் கொடுப்பது போன்று, நிர்வாண கோலத்தில் அந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை இந்தி நடிகர் அஜய் தேவ்கான் தயாரித்து இருந்தார். இந்தப் படம் மெல்போர்னில் நடந்து வரும் இந்திய பிலிம் விழாவில் பல விருதுகளைப் பெற்றுள்ளது. விருது பெற்ற செய்தி நேற்று வெளியான நிலையில் இன்று இந்தப் படம் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் எப்படி லீக் ஆனது என்று தெரியாமல் படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்