ஆப்நகரம்

ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் நடிகை ராதிகா!

சிவகார்த்திகேயன், நயன்தாராவை வைத்து ராஜேஷ் இயக்கி வரும் படத்தில் நடிகை ராதிகாவும் நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 26 Oct 2018, 3:31 pm
இயக்குன் ராஜேஷ், ‘சிவா மனசுல சக்தி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரது முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
Samayam Tamil நடிகை ராதிகா
நடிகை ராதிகா


அடுத்ததாக நடிகர் ஆர்யா, சந்தானத்தை வைத்து ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் முதல் படத்தை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் ராஜேஷ். இந்தப் படத்தில் நயன்தாரா, சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார்.படத்தை ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் கே.இ. ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமாரும் நடிப்பதாக இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இப்போது, ராதிகா மேடம் இந்த படத்தில் சேர்ந்தது, படத்துக்குள் இன்னும் பாஸிட்டிவாக அமைந்திருக்கிறது. அவர்களுக்கு என்றே வடிவைமைத்த கதாபாத்திரம் இது என சொல்லலாம். அவரை தவிர இத்தகைய கதாபாத்திரங்களுக்கு யாரும் உயிர் தந்து விட முடியாது. சிறந்த நடிகர்கள் மட்டுமல்லாமல், இத்தகைய பெரிய இயல்பான மனிதர்கள் ஒன்றாக சேர்ந்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது’’ என்றார் இயக்குனர் ராஜேஷ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்