ஆப்நகரம்

ராதிகாவின் மகளுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது: பிரபலங்கள் வாழ்த்து

நடிகை ராதிகாவின் மகன் ரயானே இரண்டாவது முறையாக தாயாகியுள்ளார். அதனால் ராதிகா குடும்பம் தற்போது மகிழ்ச்சியில் இருக்கிறது.

Samayam Tamil 16 Mar 2020, 5:07 pm
நடிகை ராதிகா சரத்குமார் தற்போது சித்தி 2 சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார். பட வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற சித்தி சீரியலின் இரண்டாவது பாகம் தான் தற்போது ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்று வருகிறது.
Samayam Tamil Rayanne Radhika child


ராதிகாவிற்கு ரயானே என்ற மகள் உள்ளார். அவருக்கும் கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் என்பவருக்கும் 2016ல் திருமணம் நடைபெற்றது.

ரயானே மிதுனுக்கு 2018ல் ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் கர்பமாக இருந்தார். இந்நிலையில் ரயானேவுக்கு நேற்று பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராமில் மகள் பிறந்தது பற்றி மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். "நாங்கள் இப்போது 4 பேர். எங்கள் பாஸ் லேடி வந்துவிட்டார்" என குறிப்பிட்டுள்ளார் ரயானே.

View this post on Instagram Our Boss Lady has arrived 💕 15.03.20 A post shared by Rayane Mithun (@rayanemithun) on Mar 15, 2020 at 6:20pm PDT

அவர்களுக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரபலங்களும் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.

பிக் பாஸ் புகழ் நடிகை சுஜா வருணி ட்விட்டரில் இது பற்றி பதிவிட்டுள்ளார். "வாழ்த்துக்கள் ரயானே. இரண்டாவது குழந்தை என்றால் இரண்டு மடங்கு கியூட், இரண்டு மடங்கு இனிமை. குடும்பத்தில் இரண்டு மடங்கு சந்தோசம்" என கூறி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்