ராதிகா சரத்குமாரின் செல்ல மகளான ரயன் மிதுனுக்கு 2 வயதில் தாரக் என்கிற மகன் இருக்கிறார். இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமான ரயன் கடந்த மார்ச் மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ராத்யா என்று பெயர் வைத்துள்ளார்கள். ராதிகாவின் பெயரை லைட்டாக மாற்றித் தான் ராத்யா என்று பெயர் வைத்திருக்கிறார் ரயன்.
இரண்டாவது பிரசவத்திற்கு பிறகு ரயன் மிதுன் வெயிட் போட்டுவிட்டார். இந்நிலையில் அவர் தன் உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம்மாகிவிட்டார். பிரசவத்திற்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரயன் மிதுன் கூறியிருப்பதாவது,
நான் எப்பொழுதுமே சப்பியாகத் தான் இருக்கிறேன். எப்பொழுதும் ஒல்லியாக இருந்தது இல்லை. அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ராத்யாவை கர்ப்பமாக இருந்தபோது கடைசி மூன்று மாதங்கள் மட்டும் சவுகரியமாக இல்லை. ஒரு சமயத்தில் என்னை பற்றிய அனைத்தையும் வெறுக்கத் துவங்கினேன். அடுத்தடுத்து கர்ப்பமானால் இப்படித் தான் நடக்கும்.
இடது பக்கம் இருக்கும் புகைப்படம் பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது. வலப்பக்கம் இருக்கும் புகைப்படம் இன்று எடுக்கப்பட்டது. இரண்டு பெண்களின் உதவியால் இது சாத்தியமானது. சாப்பாடும், உடற்பயிற்சியும் எடையை குறைக்க உதவியது என்று தெரிவித்துள்ளார்.
ரயன் மிதுன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த விஷ்ணு விஷால் ஆசம் என்று கமெண்ட் போட்டுள்ளார். வெயிட் போட்டு அதன் பிறகு ஒர்க்அவுட் செய்து எடையை குறைப்பது பற்றி விஷ்ணு விஷாலுக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் முதல் ஆளாக ரயன் மிதுனை பாராட்டியுள்ளார்.
விஷ்ணு விஷால் மட்டும் அல்ல ராதிகா சரத்குமாரின் ரசிகர்கள், ரசிகைகள் பலர் ரயனை பாராட்டியுள்ளனர். இந்த லாக்டவுனில் இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு வீட்டில் இருப்பது சிரமம். இந்நிலையில் உடல் எடையை குறைத்துள்ளது பெரிய விஷயம் தான் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ரயன் மிதுன் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் தன் மகன் தாரக்கிடம் பேசியுள்ளார். அம்மாவை போகச் சொன்னியே எங்கே போக வேண்டும் என்று ரயன் கேட்க அந்த செல்லக்குட்டியோ ஆபீஸ் என்கிறது. லாக்டவுனால் ரயன் வீட்டிலேயே இருக்கிறார். அம்மா எப்பொழுது பார்த்தாலும் வீட்டில் இருப்பது தாரக்கிற்கு பிடிக்கவில்லை போன்று என ரயனே கமெண்ட் அடித்துள்ளார்.
ரயன் தன் மகனுக்கு இரண்டு வயது தானே ஆகிறது என்று இல்லாமல் அந்த குழந்தைக்கு சின்னச் சின்ன வேலை செய்ய சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். வாஷிங் மெஷினில் தாரக் துணிகளை எடுத்துப் போட்டபோது அதை வீடியோ எடுத்து வெளியிட்டார் ரயன். வீட்டு வேலை செய்ய ஆண் குழந்தை, பெண் குழந்தை என்கிற பாகுபாடு எல்லாம் இருக்கக் கூடாது. நாம் சொல்லிக் கொடுத்தால் அவர்களே அழகாக வேலையை செய்வார்கள் என்றார் ரயன் மிதுன்.
ரயன் அவ்வப்போது தன் மகன் மற்றும் மகளின் புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அண்மையில் ராதிகா தன் செல்லப் பேத்தியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.