ஆப்நகரம்

கையில் சுருட்டுடன் டானாக காட்சியளிக்கும் நடிகை ராதிகா சரத்குமார்!

நடிகை ராதிகா சரத்குமார், ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ என்ற படத்தில் கையில் சுருட்டுடன் மிரட்டும் டானாக நடித்திருக்கிறார்.

Samayam Tamil 2 May 2019, 3:15 pm
சரண் இயக்கத்தில் நடிகை ராதிகா மற்றும் பிக்பாஸ் பிரபலம் ஆரவ், காவ்யா தாபர் ஆகியோர் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’. இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடிகர் ஆரவுக்கு அம்மாவாக நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் பெரம்பூரை மிரட்டும் டானாக நடிக்கிறார் நடிகை ராதிகா. மேலும் தனது அப்பா எம்.ஆர். ராதா போன்று பேசி நடிக்கிறாராம்.
Samayam Tamil maxresdefault


தற்போது வெளியாகியுள்ள படத்தின் போஸ்டரில் நடிகை ராதிகா கையில் சுருட்டுடன் கெத்தாக நாற்காலியில் அமர்ந்துள்ளார். பக்கத்தில் ஆரவ் நின்றுகொண்டிருக்கிறார். படத்தில் நடிகர் ஆரவ் ரயில்வே கான்டிராக்டராகவும் நடிக்கிறாராம். இந்தப் படத்தை இயக்குனர் சரண் இயக்கி வருகிறார்.

இவர் ஏற்கெனவே அஜித்தை வைத்து ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்‘, நடிகர் விக்ரமை வைத்து ‘ஜெமினி’ மற்றும் கமல்ஹாசனை வைத்து ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். ஆகிய கேங்ஸ்டர் படங்களை எடுதது ஹிட் கொடுத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த வாரம் சென்னையில் துவங்குகிறது. சைமன் கே கிங் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்