ஆப்நகரம்

Radhika இத மட்டும் பண்ணா போதும் ! உங்களுக்கு கோடீஸ்வரி சேலை கிடைக்கும்!

கோடீஸ்வரி நிகழ்ச்சியில் ராதிகா அணிந்து வரும் சேலைகளைப் போல அழகான சாரி கலெக்ஷன்ஸ் உங்களுக்கும் வேணுமா..? இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க...

Samayam Tamil 9 Mar 2020, 2:54 pm
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பரபரப்பான ரியாலிட்டி ஷோ கோடீஸ்வரி. இந்த நிகழ்ச்சியில் அழகழகான சேலைகள் அணிந்து தொகுத்து வழங்கி வருகிறார் ராதிகா. இந்த நிகழ்ச்சி சார்பில் தற்போது ட்விட்டரில் போட்டி ஒன்றை அறிவித்துள்ளனர். அந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அவர்கள் விரும்பும் சேலைகளை பரிசாக வழங்குவார்களாம்.
Samayam Tamil radhika


இதுகுறித்து ராதிகா பகிர்ந்துள்ள ட்வீட்டில் தெரிவித்துள்ளதாவது,


உங்க ஃபேவரைட் சாரி, இனி உங்க சாரி... அட ஆமாங்க... தினமும் இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை நிகழ்ச்சிகளை பாருங்கள். 3 கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லுங்கள். லக்கி வின்னர்களுக்கு அவர்கள் விரும்பும் சேலை பரிசாக கிடைக்கும். அதை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அந்த விளம்பரம் கூறுகிறது.

இந்த பதிவை தனது ட்விட்டர் முகவரியில் இணைத்துள்ள ராதிகா, அழகான சேலைகளை வெல்லுங்கள் எனக் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சில நல்ல கதாபாத்திரங்களில் அவ்வப்போது நடித்து வரும் ராதிகா, சித்தி 2 மற்றும் கோடீஸ்வரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். இதே மாதிரியான நிகழ்ச்சியை பல ஆண்டுகளுக்கு முன்னர் சரத்குமார் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்