ஆப்நகரம்

வெற்றிமாறன் திரைக்கதையில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு திரைக்கதை எழுதுகிறார் வெற்றிமாறன். இந்த படத்திற்கு அதிகாரம் என டைட்டில் வைக்கபட்டுள்ளது.

Samayam Tamil 25 Jun 2021, 12:11 pm
அசுரன் பட வெற்றியைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வாடிவாசல், சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் படத்தையும் இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம் ஒன்றிற்கு திரைக்கதை எழுதுகிறார் வெற்றிமாறன். இந்த படத்தை துரை செந்தில் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு அதிகாரம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Adhigaram
Adhigaram


அசுரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது நடிகர் சூரியை ஹீரோவாக்கி விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு நடிகர் சூரி சிக்ஸ்பேக் வைத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி வைரலானது. அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான விசாரணை திரைப்படம் போலவே இந்த படத்தையும் வித்தியாசமாக இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

நடிகர் சூரியை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். சூர்யா தற்போது பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா 40 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் கதையில் இன்னொரு பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிவேதாவின் புகார் எதிரொலி: பிரபல உணவகம் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!
அதாவது, ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு திரைக்கதை எழுத உள்ளார் வெற்றிமாறன். இந்த படத்தை 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரைசெந்தில் இந்த இயக்க உள்ளார். இப்படத்திற்கு அதிகாரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே லாரன்ஸ் 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், S.கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்’ நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெற்றிமாறன் கதையில் லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்