ஆப்நகரம்

மரக்கன்றுகள் வழங்கி, ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய லாரன்ஸ்!

மரக்கன்றுகள் வழங்கி, ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய லாரன்ஸ்!

TOI Contributor 2 Jan 2017, 10:16 am
ராகவா லாரன்ஸ் நடப்பு, இயக்கம், நடனம் மட்டுமல்லாமல் சமூக சேவையிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்பவர். இவர் தன்னுடைய ராகவேந்திரா அறக்கட்டளை மூலம் பலருக்கும் மருத்துவ மற்றும் கல்வி உதவிகளை செய்துவருகிறார்.
Samayam Tamil raghava lawrence celebrated new year with orphaned childrens
மரக்கன்றுகள் வழங்கி, ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய லாரன்ஸ்!


இவர் திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் உள்ள ராகவேந்திரா ஆலயத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடினார். இவர் கட்டியுள்ள ராகவேந்திரா ஆலயத்தின் 8ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது சுமார் 60 ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடினார். மேலும் கோவிலுக்க வந்த பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து கருத்துக்களை தெரிவித்தார். பொதுமக்கள் யாருக்காவது மரம் வேண்டுமென்றால் லாரன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட்டை தொடர்பு கொண்டால் வீடு தேடி வந்து மரக்கன்றுகள் வழங்கப்படும் என்றார். வர்தா புயலுக்கு பிறகு நிறைய மரங்களை இழந்து விட்டோம் என்றும், அதனால் மரக்கன்றுகளை நட்டு இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்