ஆப்நகரம்

மூன்று பேய் நாயகிகளுடன் டூயட் பாடும் லாரன்ஸ்!

‘காஞ்சனா 3’ படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் மூன்று நாயகிகளுடன் டூயட் பாடவுள்ளார்.

TNN 9 Sep 2017, 4:39 pm
‘காஞ்சனா 3’ படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் மூன்று நாயகிகளுடன் டூயட் பாடவுள்ளார்.
Samayam Tamil raghava lawrence dance and duet with 3 heroines
மூன்று பேய் நாயகிகளுடன் டூயட் பாடும் லாரன்ஸ்!


ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் உருவான முதல் பேய் படம் ‘முனி’. இந்தப் படத்துக்கு புதுவிதமான வடிவத்தைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். அந்தப் படம் வெற்றி பெற்றதால் அதையே அவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அதைஅடுத்து ‘காஞ்சனா1’ , ‘காஞ்சனா 2’ என்ற படங்களை இயக்கி வெற்றிக் கண்டார். தற்போது இதன் மூன்றாம் பாகத்தை எடுக்க தயாராகவுள்ளார்.

இந்தப் படத்தில் மொத்தம் 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்களாம். இதில் ஒரு பிரபல நடிகையும், இரண்டு புதுமுகங்களும் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ‘முனி’ முதல் பாகத்தில் நடித்த வேதிகாவே இந்தப் படத்திலும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால், அது உண்மையில்லை என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்