ஆப்நகரம்

கலவரத்தில் முடிந்த ஜல்லிக்கட்டு போராட்டம்: வேதனையில் வாடும் ராகவா லாரன்ஸ்

ஜல்லிக்கட்டு போராட்டம் கலவரத்தில் முடிந்தது, மிகவும் வருத்தமளிப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

TNN 26 Jan 2017, 1:41 pm
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் கலவரத்தில் முடிந்தது, மிகவும் வருத்தமளிப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil raghava lawrence expresses his sadness about the jallikattu protest
கலவரத்தில் முடிந்த ஜல்லிக்கட்டு போராட்டம்: வேதனையில் வாடும் ராகவா லாரன்ஸ்


ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி, தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டம் திருவிழாக் கோலம் போல் காட்சியளித்தது. ஏராளமான தன்னார்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உணவுப் பொருட்கள் அளித்து உதவினர். மாணவர்களுடன் ஏராளமான நட்சத்திரங்களும் ஆதரவு அளித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு, தன்னால் முடிந்த உணவு ஏற்பாடுகளை நடிகர் ராகவா லாரன்ஸ் அளித்தார். இந்நிலையில் மிகவும் அமைதியாக, கண்ணியமாக நடைபெற்று வந்த போராட்டம், கலவரத்தில் முடிந்தது. காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த லாரன்ஸ், காயம்பட்ட மாணவர்களை மருத்துவமனைக்கு சென்று சந்திக்க முயன்ற போது, காவல்துறையினர் தடுத்துள்ளனர்.

இந்நிலையில் மாணவர்கள் போராட்டம் சரித்திரம் படைத்து விட்டது. ஆனால் அதை கொண்டாட முடியாமல் போராட்டம் கலவரத்தில் முடிந்தது மிகவும் வருத்தமாக உள்ளதாக ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். மேலும் மாணவர்கள் யாரும் அதிகாரத்தில் இருப்பவர்களை அவதூறாக பேசியிருந்தால் மன்னிக்க வேண்டும் என்றும், கைதான மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Raghava Lawrence expresses his sadness about the Jallikattu Protest.

அடுத்த செய்தி

டிரெண்டிங்