ஆப்நகரம்

குருவே, உங்க முடிவு சுயநலமில்லா முடிவு: ரஜினியை பாராட்டிய ராகவா லாரன்ஸ்

ரஜினிகாந்த் எடுத்த முடிவு சுயநலமில்லா முடிவு என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 30 Dec 2020, 8:25 am
ஜனவரி மாதம் கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று ரஜினி அறிவித்தார். மேலும் கட்சி துவங்கும் தேதியை டிசம்பர் 31ம் தேதி தெரிவிப்பதாக கூறினார். இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றார். அங்கு அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரம் ஓய்வில் இருக்க வேண்டும், ஸ்ட்ரெஸ் கூடாது, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.
Samayam Tamil rajinikanth


கட்சியே வேணாம்னு ரஜினி சொல்லும் அளவுக்கு ஹைதராபாத்தில் நடந்தது என்ன?

இதையடுத்து சென்னை திரும்பிய ரஜினி தான் கட்சி துவங்கவில்லை என்று நேற்று அறிவித்தார். கட்சி துவங்காமல் இருப்பதற்காக அவர் சொன்ன காரணம் ரசிகர்களை கவர்ந்தாலும் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கட்சி துவங்காதது பற்றி ரஜினி கூறியதாவது,

நான் கட்சி துவங்கவில்லை என்று ரஜினி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும் என்றார்.

இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான நடிகரும், இயக்குநரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

குருவே, நீங்கள் எடுத்த முடிவு 100 சதவீதம் சரி. மற்றவைகளை விட உங்களின் உடல்நலம் தான் எங்களுக்கு முக்கியம். உங்களை நம்புபவர்கள் மீது அக்கறை கொண்டு சுயநலமில்லா முடிவை எடுத்துள்ளீர்கள். நீங்கள் எப்பொழுதுமே அடுத்தவர்கள் மீது அக்கறை கொள்பவர். அது தான் உங்களை சிறந்தவர் ஆக்குகிறது. உங்களின் நலனுக்காக நான் ராகவேந்திரா சுவாமியை வேண்டுகிறேன். குரவே சரணம் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்