ஆப்நகரம்

சந்திரமுகி 2ல் ராகவா லாரன்ஸுக்கு ஜோடி இந்த பாலிவுட் நடிகையா?

ராகவா லாரன்ஸ் அடுத்து நடிக்க உள்ள சந்திரமுகி 2 படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

Samayam Tamil 27 Jul 2020, 3:47 pm
பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடித்த படம் சந்திரமுகி. 2005 இல் வெளிவந்த இந்தப் ஹாரர் படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிரமாண்ட ஹிட் ஆனது.
Samayam Tamil Chandramukhi 2


இந்த படத்தில் இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார். இந்த படத்தையும் பி.வாசு தான் இயக்கவுள்ளார். ஏற்கனவே முனி, காஞ்சனா சீரிஸ் எடுத்து தமிழ் சினிமாவில் ஹாரர் படங்கள் என்றால் நமக்கு ராகவா லாரன்ஸின் பெயர் தான் ஞாபகத்துக்கு வருகிறது. இந்த வரிசையில் தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வந்தது ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக அமைந்தது. இந்த படத்தின் கதை பற்றி இயக்குனர் வாசு அளித்திருந்த பேட்டி ஒன்றில், முதல் பாகத்தில் வரும் அரண்மனையில் ஒரு புதிய குடும்பம் சென்று தங்கினால் என்ன நடக்கும் என்பதை காட்டும் விதத்தில் தான் கதை இருக்கும் என கூறியிருந்தார். ராகவா லாரன்ஸ் அந்த குடும்பத்தில் ஒருவராக நடிக்க உள்ளார். மேலும் வேட்டையன் மற்றும் சந்திரமுகி ஆகிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ள நடிகர்கள் யார் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகமல் தான் இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என கூறப்படுகிறது.


கியாரா அத்வானி ராகவா லாரன்ஸ் இயக்கி உள்ள பாலிவுட் படம் லக்ஷ்மி பாம் என்ற பாலிவுட் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற காஞ்சனா என்ற படத்தின் ஹிந்தி ரீமேக் தான் இது. ராகவா லாரன்ஸ் நடித்த ரோலில் அக்ஷய் குமார் நடிக்க, ஹீரோயினாக கியாரா அத்வானி நடித்துளளார். இந்த படம் ஷுட்டிங் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் சூழ்நிலையில் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டதால் இந்த படத்தினை வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நேரடியாக ஓடிடி இணையதளம் ஒன்றில் வெளியிட உள்ளனர். இது பற்றி அதிக வரவேற்பு ஏற்கனவே வெளிவந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது கியாரா அத்வானி மீண்டும் ராகவா லாரன்ஸ் உடன் கூட்டணி சேர உள்ளார் என்ற செய்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பரவி வருகிறது. இருப்பினும் இது பற்றிய உறுதியான அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பதால் சந்திரமுகி 2 படத்தின் ஹீரோயின் யார் என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதி ஆகும்.

சந்திரமுகி 2 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்காக சம்பள அட்வான்ஸ் தொகையினை பெற்று அதை அப்படியே கொரோனா நிவாரண நிதியாக ராகவா லாரன்ஸ் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 3 கோடி ரூபாயை அப்படியே நிவாரணப் பணிகளுக்காக லாரன்ஸ் கொடுத்தார். அந்த சமயத்தில் அவருக்கு இதற்காக பெரிய அளவில் பாராட்டுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்