ஆப்நகரம்

விஷ்ணு விஷால் படத்தில் அறிமுகமாகும் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி!

நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி, விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.

Samayam Tamil 5 Feb 2018, 5:35 pm
நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி, விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.
Samayam Tamil rajashekar daughter shivani debut as vishnu vishal movie
விஷ்ணு விஷால் படத்தில் அறிமுகமாகும் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி!


நடிகர் விஷ்ணு விஷால் தற்போது நடிகைகள் ரெஜினா மற்றும் ஓவியாவுடன் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ‘ராட்சஸன்’ என்ற படத்தில் அமலா பாலுடன் நடித்து வருகிறார். அதேசமயம், நிவேதா பெத்துராஜுடன் ‘ஜெகஜால கில்லாடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார், விஷ்ணு விஷால். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள ‘இடம் பொருள் ஏவல்’ படம் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் வெங்கடேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் பாடகர் கிரிஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வரும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஷிவானி ராஜசேகர் அறிமுகமாகிறார். இவர் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதியின் மகள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்